தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, நாகை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் கணித்துள்ளனர். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்பதும் அவர்களது கணிப்பு. தென்தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் அந்தப் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Posts