தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வெப்பச் சலனம் காரணமாக தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, வேலூர், திருவண்ணாமலை,சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், தேனி, நெல்லை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சில இடங்களில் அனல் காற்று வீசும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வீரகனூர் மற்றும் கங்கவல்லியில் 5 சென்டிமீட்டரும், திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 4 சென்டிமீட்டரும், கடலூர் மாவட்டம் வேப்பூர் மற்றும் லக்கூர், நீலகிரி மாவட்டம் உதகை உள்ளிட்ட இடங்களில் 3 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts