தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சை, நாகை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts