தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பெரும்பாலான இடங்களில், 38 டிகிரி செல்ஷியஸ் முதல், 44 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை பதிவாகிறது. தமிழகத்தில் நேற்று 14 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி உள்ளது. அனல் காற்றும் சேர்ந்து வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். மாலை நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், மண்மலை, நாச்சிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

கிருஷ்ணகிரியில் ஊத்தங்கரை, சாமல்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர், அரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

மதுரை, நீலகிரி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழையும், தருமபுரி, விழுப்புரம், செஞ்சி, வளத்தி, ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழையும் பெய்தது.

Related Posts