தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்-சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே இதற்குக் காரணம் என வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம், நாமக்கல், திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று அவர்கள் கணித்துள்ளனர். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில், மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மழையை பொறுத்தவரை வட தமிழகத்தில் பல இடங்களில் பரவலாகவும், தென் தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 17 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

Related Posts