தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவர் நல்லக்கண்ணுக்கு அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக நல்லகண்ணு வசித்து வந்ததாக கூறியுள்ளார்.

அங்கே புதிய திட்டத்தை வாரியம் செயல்படுத்தப் போவதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, அந்த வீட்டிலிருந்து நல்லக்கண்ணு வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

போற்றுதலுக்குரிய ஒரு தலைவரை உடனடியாக வெளியேற்றச் செய்த அரசின் நடவடிக்கையை கண்டிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 94 வயதுடைய மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதேபோன்று நல்லக்கண்ணுவுக்கு வேறு வீடு ஒதுக்கிவிட்டு காலி செய்யக் கூறியிருக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்த பழ.நெடுமாறன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இவ்விவகாரத்தில் தலையிட்டு நல்லக்கண்ணுவுக்கு அரசு வீடு ஒன்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதே கருத்தை டிடிவி தினகரன், பாஜக தலைவர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Posts