தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதலமைச்சர்  எதுவும் செய்யவில்லை:  ஸ்டாலின்

ஸ்ரீபெரும்பதூரில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது பேசிய அவர்,  தமிழகம் தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னிலையில் இருப்பதற்கு வித்திட்டவர் கலைஞர் கருணாநிதி என்று கூறினார்.   பிரதமர் மோடி  அளித்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றவில்லை என்று தெரிவித்த அவர்,

8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதோடு நிலத்தை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

 

8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் என நிதின் கட்காரி கூறுவது நீதிமன்ற அவமதிப்பு இல்லையா?  என்று கூறிய அவர்,  8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவோம் என நிதின் கட்காரி கூறும் போது முதலமைச்சர் தடுக்காதது ஏன்?  என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், ஆறுமுகசாமி ஆணையம் 6 முறை சம்மன் அனுப்பியும் ஓபிஎஸ் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?  என கேள்வி எழுப்பினார். 

 

கொள்கை ரீதியில் அமைந்தது திமுக கூட்டணி எனவும் வியபார ரீதியில் அமைந்தது அதிமுக கூட்டணி எனவும் அவர் கூறினார். முதமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழைந்துவிட்டதாகவும்,  கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தவரை தமிழகத்திற்குள் நீட்தேர்வு நுழைய முடியவில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

Related Posts