தமிழகத்திற்காக அதிமுக எம்.பி.க்கள் என்ன செய்தார்கள்,  எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் கேள்வி

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், மத்தியில் சர்வாதிகார ஆட்சியும், மாநிலத்தில் உதவாக்கரை ஆட்சியும் நடைபெற்று வருவதாக விமர்சித்தார். அதிமுக தலைமையில் கூட்டணி கொள்கைக்கானது இல்லை எனவும், கொள்ளைக்கானது எனவும் குறிப்பிட்டார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது செருப்பு வந்து விழுவதன் மூலம், மக்கள் எந்தளவுக்கு இவர்கள் மீது கோபமாக உள்ளார்கள் என்பதையே எடுத்துக் காட்டுவதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க்கையே கிழிய போகிறது என தெரிவித்த அவர், மோடி இந்திய பிரதமர் அல்ல எனவும், வெளிநாட்டு வாழ் பிரதமர் எனவும் ஸ்டாலின் விமர்சித்தார்.

Related Posts