தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை பாஜக அரசு இன்னும் கொண்டு வரவுள்ளது

தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை பாஜக அரசு இன்னும் கொண்டு வரவுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-26

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சியில் 8 கோடி சிறு குறு தொழிலாளர்களை முதலாளியாக உருவாக்கி உள்ளதாக கூறினார். பாஜக ஆட்சி பற்றி எதிர்மறை தகவல்கள் வேகமாக பரப்பப்படுகின்றன என்று குற்றம்சாட்டிய தமிழிசை சவுந்தரராஜன், விவசாயம், சமையல் மானியம் உள்ளிட்ட அனைத்தும் மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை பாஜக அரசு இன்னும் கொண்டுவர உள்ளது என்றும் அவர் கூறினார்.

Related Posts