தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்தால் பெட்ரோல்,டீசல் மீதான விலையைக் குறைக்க முடியும்

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்தால் பெட்ரோல்,டீசல் மீதான விலையைக் குறைக்க முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

                சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சென்னையில் வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவிற்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த விழாவிற்கு தேசிய தலைவர்களை அழைப்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் கூறினார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் அதிமுக அரசுக்கு மாறுபட்ட கருத்து இல்லை என்ற அமைச்சர், இந்த விஷயத்தில், மக்களின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். 7 பேர் விடுதலை விவகாரத்தில் கூட்டணி கட்சியான காங்கிரசிடம் ஸ்டாலின் வலியுறுத்துவாரா என வினவிய ஜெயக்குமார்,  இதற்கு காங்கிரஸ் ஒத்துழைக்காவிட்டால் கூட்டணியில் இருந்து விலகப் போவதாக ஸ்டாலின் கூற வேண்டும் என்றார். பெட்ரோல் டீசல் விலையை ஏற்றிக்கொண்டே போவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற அமைச்சர், பெட்ரோல் டீசல் மீதான விலையை குறைக்க தமிழக அரசுக்கு மனம் இருந்தாலும் போதிய நிதி இல்லை என்றார். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு கொடுத்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Posts