தமிழகத்திற்கு  102 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது

கட்டாயகல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு  102 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

        ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா 35 ஆயிரத்தில் இருந்து  50 ஆயிரம்  ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.  2 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள சூழலில், மாத ஊதியம் 7 ஆயிரத்து 500 ரூபாய் அடிப்படையில் பெற்றேர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பகுதிநேர ஆசிரியர்களை நியமித்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மகப்பேறு காலத்தில் விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களுக்கு மாற்றாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க நட்வடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 102 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும், கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts