தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு அனல் காற்று வீசும்:  சென்னை வானிலை ஆய்வு மையம் 

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலம் தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பகல் நேர வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.சென்னையில் 105 டிகிரியாகவும், வேலூரில 111 புள்ளி 2 டிகிரியாகவும் பகல் நேர வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதே போல்சேலத்தில் 105 புள்ளி 8 டிகிரியாகவும், திருச்சியில் 107புள்ளி 6 டிகிரியாகவும், நாமக்கல்லில் 107புள்ளி 6 டிகிரியாகவும், மதுரையில் 111.2 டிகிரியாகவும், தூத்துக்குடியில் 104 டிகிரியாகவும் வெப்பம் பதிவாகி உள்ளது. இந்நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்றுவீசும் எனவும்,  பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் சென்னை வானிலை ஆய்வு ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.இதே நேரத்தில் தமிழக வளிமண்டலத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கில் நிலவும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஒரு சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும், இடியுடன் கூடிய மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தையொட்டிய வங்க கடல் பரப்பின் தெற்கு மற்றும் தென்மேற்கில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன்பிடிக்க செல்ல வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts