தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, மிதமான மழை நீடிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு, மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை  : ஜூன்-18

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் வரும் 20-ந்தேதி வரை, மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் பாதுகாப்புடன் கடலுக்கு செல்லுமாறு வானிலை மைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts