தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் : வானிலை

தமிழகத்தில் அனேக இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி,தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தார்.  கடந்த 24 மணி நேரத்தில் தோவாலாவில்   7 சென்டி மீட்டரும் தாம்பரத்தில் 5சென்டி மீட்டரும்  மழை பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.  தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர் காஞ்சிபுரம் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவர்  தெரிவித்தார். சென்னை புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் . தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யும் என்றும் அவர்  தெரிவித்தார். கடற்காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் எனவே அடுத்த 2 நாட்களுக்கு

தென் கிழக்கு அரபிக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடாவுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.

Related Posts