தமிழகத்தில் அதிக விபத்து ஏற்படக்கூடிய 846 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்து ஏற்படக்கூடிய 846 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் ஏற்படக்கூடிய இடங்கள் தொடர்பாக மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், மாநிலம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படக்கூடிய 846 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது,. அதில், மண்ணூர்பேட்டையில் உள்ள அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பகுதி, கடந்த 3 ஆண்டுகளில் அதிக விபத்துக்கள் ஏற்பட்ட பகுதியாகவும், அங்கு 775 சாலை விபத்துகள் நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. பெங்களுரு – சென்னை நெடுஞ்சாலையில் உள்ள நஸ்ரத் பேட்டை சந்திப்பில் 520 சாலை விபத்துகளும், போரூர் டோல்கேட் பகுதியில் 423 சாலை விபத்துகளும் நடைபெற்றிருப்பதாக அந்தக் கடித்தத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, 128 பகுதிகளில் போதுமான  நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளது.

Related Posts