தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் ஜூன் 1ம் தேதி திறப்பு

 

 

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜீன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்துப்பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப்பிறகு ஜூன் 7 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைத்துப் பள்ளிகளும் கோடை விடுமுறைக்குப் பிறகு ஜீன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என அறிவுறுத்தினார். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இளங்கோவன், பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாகவும், பழுதுகள் இருந்தால் அதனை சரிசெய்தும் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டார். பள்ளி வளாகத்தில் புதர்கள், குப்பைகள் இல்லாதவாறும், வகுப்பறைகளை சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், வகுப்பறையில் பழுதடைந்த மின்விசிறிகள், விளக்குகளை சரி செய்து வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.  கழிப்பறைகளை சுத்தம் செய்து, பழுது இருந்தால் அதனை நீக்க வேண்டும் எனவும், தண்ணீர் தொட்டிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

Related Posts