தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு வாக்களிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கருர் அரவக்குறிச்சி தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து திமுக தலைவர் பிரசாரம் செய்தார். மலைக்கோவிலூர் பகுதியில் பிரசாரம் செய்த அவர் பிரதமர் மோடியை பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்திருப்பது போல மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட செந்தில்பாலாஜிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் மோடி சர்வாதிகாரி என்றால், எடப்பாடி உதவாக்கரை என்று குறிப்பிட்ட அவர், அதிமுக தொண்டர்களை ஏமாற்ற பாக்கெட்டில் ஜெயல்லிதா படத்தை வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார்.

Related Posts