தமிழகத்தில், இந்து மத விழாக்களுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் வந்து கொண்டிருக்கிறது

தமிழகத்தில், இந்து மத விழாக்களுக்கு தடைகளும், முட்டுக்கட்டைகளும் வந்து கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்து மத விழாக்களுக்கு தடைகளும், முட்டுக்கடைகளும் வந்து கொண்டிருப்பதாகவும், இவை தடுக்கப்பட வேண்டும் என்பதே பாஜகவின் கருத்து எனவும் தெரிவித்தார். செங்கோட்டையில், பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள் எனவும், இதனை தடுக்கும் விதத்தில் தனது நடவடிக்கை இருக்கும் என அவர் கூறினார்.

Related Posts