தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு:வானிலை ஆய்வு மையம் 

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்கர்நாடகம் முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிக்கிறது. எனவும், இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யலாம் எனவும்,  தென் தமிழகத்தில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கொடைக்கானல், குழித்துறை மற்றும் பேச்சிப்பாறை பகுதிகளில் தலா 5 செமீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts