தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக கடற்கரையோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, கரூர், திண்டுக்கல், தேனி, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

Related Posts