தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும் : செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கையே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்ற  அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை தொடரும் எனவும், பாடப்புத்தகத்தில் தமிழ்மொழி குறித்து பிழையாக வந்தது பற்றி ஆய்வுசெய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் ஆங்கில வழிக்கல்விக்கு செலுத்திய கட்டணம் திரும்ப அளிக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர் செங்கோட்டையன் இரண்டு மாதங்களுக்குள் பாயோமெட்ரிக் முறை தொடக்கப் பள்ளிகளுக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்தார்.

Related Posts