தமிழகத்தில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் எத்தனை தடுப்பணைகள் கட்ட முடியுமோ அத்தனை கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி

மக்களவை மற்றும் தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊர்கள் தோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதில் முசிறி, மண்ணச்சநல்லூர்,துறையூர், பெரம்பலூர், குன்னம், அரியலூர், விருத்தாச்சலம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர் ஆகிய ஊர்களில் அவர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு உரிய திட்டங்களை தருவதையே அதிமுக அரசு முதல் கடமையாக கருதுகிறது என்றார்.

விவசாயத்திற்கு உரிய தண்ணீரை கொடுக்க தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் தடுப்பணை கட்டும் பணியை அரசு தொடங்கி உள்ளதாக அவர் கூறினார். எத்தனை தடுப்பணைகள் கட்ட முடியுமோ அத்தனையும் கட்ட அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதி அளித்தார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த தாம் இன்னமும் விவசாயம் செய்து வருவதை சுட்டிக் காட்டிய முதலமைச்சர், கடும் வெயிலில் உழைத்து பழகியதால், காலை முதல் இரவு வரை பிரசாரத்தில் ஈடுபடுவதாக கூறினார். ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் இரவில் மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுவதாக அவர் புகார் தெரிவித்தார்.

தமிழக வீரர் அபிநந்தனை பத்திரமாக மீட்ட மோடியால் மட்டுமே நாட்டையும் பத்திரமாக காக்க முடியுமென அவர் தெரிவித்தார்.

Related Posts