தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

நீர்நிலைகளை தூர்வாருதல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக்கோரும் வழக்குகளை நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு மீண்டும் விசாரித்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எந்த தொழில்நுட்ப அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக தமிழக தலைமை  செயலாளர் தலைமையில், பொதுப்பணித்துறை செயலாளர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட துணை ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியயோருடன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்குட்பட்ட 13  மாவட்டங்களிலுள்ள நீர்நிலைகளை பாதுகாத்து பராமரிப்பது மற்றும் அவற்றிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆலோசித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய அவர்கள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக, வழக்கறிஞர் வீரகதிரவனை நியமித்த நீதிபதிகள், அவரும் அந்த ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி,திண்டுக்கல், கரூர், திருவாரூர், சிவகங்கை  ஆகிய 13 மாவட்டங்கள் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts