தமிழகத்தில் உள்ள பள்ளி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும்

தமிழகத்தில் உள்ள பள்ளி பேருந்துகளை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-16

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் சரியான ஒழுங்கான முறையில் பராமரிக்கப்பட்டு இயங்குகிறதா? என்பதை ஆண்டுதோறும் ஆய்வு செய்து, அந்த வாகனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னை நந்தனம் அரசு கல்லூரி வளாகத்தில் பள்ளி வாகனம் தர ஆய்வு மற்றும் சோதனை இன்று காலை நடைபெற்றது. தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற சோதனையில், அரசு விதிமுறைகளின் படி பள்ளி வாகனங்கள் பாராமரிக்கப்படுகிறதா, பேருந்தில் உள்ள அவசரகால வழி, மருத்துவ முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளனவா என்பது பற்றி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், 5000 அரசுப் பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறினார். மேலும், பள்ளி பேருந்துகள் முறையாக இயங்குகிறதா? என கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Posts