தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

 

 

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், சென்னையில் இரவில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று கூறினார். அடுத்து வரும் 24மணிநேரத்தை பொறுத்தவரையில் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அவர் கூறினார்.  தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரையில் கடந்த ஜூன் மாதம் 1 முதல் ஜூன் 30-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் இயல்பு அளவை விட 6 சதவீதம் அதிகமாக மழை பெய்துள்ளது எனவும்  பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Posts