தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில்  பெரும்பாலான  மாவட்டங்களில்,  ஓரிரு  இடங்களில்,   மிதமான  மழைக்கு   வாய்ப்புள்ளதாக  சென்னை  வானிலை  ஆய்வு  மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மாலையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Posts