தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் புவியரசன், நீலகிரி,கோவை, தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும், தெற்கு மற்றும் உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40-ல் இருந்து 50கிலோ மீட்டர்  வேகத்தில் காற்று  வீசுவதால், குமரிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீனவர்களை அவர் எச்சரித்தார். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றார் அவர்.

Related Posts