தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வுமையம்

 

 

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், வெப்பச்சலனம் காரணமாக, பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக,   வட மற்றும் தென் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Posts