தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.  உதகை, நீலகிரி, குன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தேனி மாவட்டத்தில் தேனி, போடி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், திண்டுக்கல், மதுரை, விருதுநகர். சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் 3வது வாரத்தில் தொடங்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

Related Posts