தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்:ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவைத்  தேர்தலுடன் சேர்ந்து   காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதே தேதியில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில்,  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான  வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைகிறது. 30-ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறுகிறது. மே 2ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். இந்த நான்கு தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மக்களவைத் தேர்தல் மற்றும்  18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளுடன் சேர்த்து மே 23-ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Related Posts