தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை-ஓ.பன்னீர்செல்வம்

சென்னையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டதால், குடிநீர் பற்றாக்குறை தான் ஏற்பட்டுள்ளதே, தவிர குடிநீர் பஞ்சம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது என்று அவர் கூறினார்.

 

டெல்டா பகுதிகளில் நீர் நிலைகளை தூர்வார மத்திய அரசிடம் 17,600 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாகவும்,  இதனை பரிசீலித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய அரசு கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

மழை பெய்ய வேண்டி அதிமுக சார்பில் தான் யாகம் நடத்தப்பட்டதாகவும் அரசின் சார்பாக நடைபெறவில்லை என்று அவர் கூறினார்.

Related Posts