தமிழகத்தில் கோடை வெயில் இயல்பை விட அதிகரிக்கும்

 

 

 

தமிழகத்தில் ஜூன் மாதம் வரை கோடை வெயில் இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்கியது. வருகிற 28-ந்தேதி வரை 24 நாட்கள் கத்திரி வெயில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வறண்ட வானிலை, காற்றின் ஈரப்பதம் குறைவு காரணமாக, தமிழகத்தில் ஜூன் மாதம் வரை கோடை வெயில் இயல்பை விட 5 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என்று, கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தெற்கு உள் கர்நாடகாவில் இருந்து கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும், தென் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts