தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுகிறது : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அருண் ஜெட்லி உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தமிழகத்தில்  தீவிரவாதம் தலைதூக்காத வகையில் காவல் துறையை முடிக்கி விட்டு முதலமைச்சர் பார்த்துக்கொள்வார் எனவும் இதுகுறித்து தமிழக மக்கள் அச்சபடத் தேவையில்லை என்வும் கூறினார்.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பதற்காக தான் ஸ்ரீநகர் சென்ற எதிர்கட்சி தலைவர்களை திருப்பி அனுப்பப்பட்டனர் என்று தெரிவித்தார்.

Related Posts