தமிழகத்தில் சாலையில் பயணிக்கக் கூட முடியாத கோழை பிரதமர் மோடி

தமிழகத்தில் சாலையில் பயணிக்கக் கூட முடியாத கோழை பிரதமர் மோடி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னை : ஏப்ரல்-11

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூட்ரினோ திட்டம் வந்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆகி விடும் என்று கூறினார். மேலும், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தந்துள்ளதாக வைகோ தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்று குற்றம்சாட்டிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழகத்தில் சாலையில் பயணிக்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு உண்டா? என்று சவால் விடுத்தார்.

Related Posts