தமிழகத்தில் திமுக அலை வீசுகிறது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து  உதயநிதிஸ்டாலின் பாளையாங்கோட்டை மார்க்கெட் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர்,  

கடந்த 12 நாட்களாக தான் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதி வருவதாகவும் தற்போது  மோடி அலைக்கு பதிலாக முக ஸ்டாலின் ஆதரவு அலை வீசுவதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து முக்கூடல், களக்காடு, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Related Posts