தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை பிரசாரம்

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணியுடன் ஓய்கிறது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். மேலும் அவர் வருகிற 13-ந்தேதி காலை ராமநாதபுரத்திலும், அன்றையதினம் மாலை தேனியிலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக நாளை தமிழகம் வருகிறார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திருப்பரங்குன்றம் ஆகிய 4 ஊர்களில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

Related Posts