தமிழகத்தில் துணைவேந்தர் பதவி நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் : பன்வாரிலால்

தமிழகத்தில் துணைவேந்தர் பதவி நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பரிமாற்றம் நடைபெற்றதாக வந்த தகவலை. முதலில் நம்பவில்லை என்றார். ஆனால், தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டது எனவும், இதைக் கண்டு வருத்தமடைந்ததாகவும் அவர் கூறினார்.  துணைவேந்தர் நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடைபெற வேண்டும் எனவும்,. இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதியின் அடிப்படையில் நியமித்துள்ளதாகவும் அவர் கூறினார். துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடப்பதாக ஏராளமான புகார்கள் எழுந்த நிலையில், தமிழக ஆளுநர் அதனை வெளி உலகுக்குத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts