தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் தொடங்க வாய்ப்பு

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை அடுத்த இரண்டு நாட்களில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை : மே-27

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  நிலவுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts