தமிழகத்தில்  தேர்தல் நடத்தை விதிகள் வரும் 27-ந் தேதி வரை  அமலில் இருக்கும்: சத்யபிரதா சாகு 

மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2-ம் கட்டதேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்றது. இதுவரை   6 கட்ட தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில். எஞ்சிய 7-ம் கட்ட மக்களவை தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதனுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.  வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் மே 23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாகு  தேர்தல் நடைமுறைகள் மே 27 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அன்று வரை தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் எனவும்  கூறினார்.

ReplyForward

Related Posts