தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சி கல்லா கட்டுவதிலும், கொள்ளை அடிப்பதிலுமே கவனமாக இருக்கிறது

தமிழகத்தில் நடைபெறும் பினாமி ஆட்சி கல்லா கட்டுவதிலும், கொள்ளை அடிப்பதிலுமே கவனமாக இருப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

                 சென்னை, தாம்பரத்தில் பா.ம.க சார்பில் நடைபெற்ற ஊழல் ஒழிப்பு கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, கடந்த 12 ஆண்டுகளில் 7 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாகவும்,நாகையில் கடந்த இரண்டு நாட்களில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனையளிப்பதாகவும் கூறினார். தற்போது உள்ள அரசுக்கு நாள்தோறும் கல்லாக்கட்டுவதிலும், கொள்ளையடிப்பதிலும் கணக்கு பார்க்கவே நேரம் சரியாக உள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தற்போதுள்ள ஆட்சியின் ஊழல் குறித்து 200 பக்கங்களுக்கு மேல் பட்டியலிட்டு ஆளுநரிடம் அளித்துள்ளதாகவும், ஆளுநர் முழுமையாக படித்து  நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தலுக்கு 3மாதம் முன்பு முடிவு செய்யப்படும் என ராமதாஸ் கூறினார்.

Related Posts