தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை சீர்குலைக்க எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்


ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,: மத்தியில் நிலையான ஆட்சி அமைய  மீண்டும் மோடி  பிரதமராக வர வேண்டும் என்றார். மோடி பிரதமரானால் நாடு வளம் பெறும்எனவும், குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஊரணிகள் ஆழப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.. சட்டம் ஒழுங்கு பேணி காப்பதில் நாட்டிலேயே தமிழகம் சிறப்பிடத்தை பெற்றுள்ளது எனவும்,  . தமிழகத்தில் நடைபெற்று வரும்  நல்லாட்சியை சீர்குலைக்க ஸ்டாலின் தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

முன்னதாக பரமக்குடியில் வாக்கு சேகரித்த  முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவதற்கு காரணமாக இருந்த எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் இந்தத் தேர்தலில்வாக்காளர்கள் தக்கபு பாடம் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related Posts