தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-28

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 14 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய மருத்துவ உபகரணங்களின் பயன்பாட்டை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறினார். கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சியில் அனுமதிக்கப்பட்ட 2 பேருக்கும் சாதாரண காய்ச்சலே இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார்.

Related Posts