தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது

தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை : மே-02

சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது, குடிகாரனா பார்த்து திருந்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று கூறிய ஜெயக்குமார், டாஸ்மாக் இல்லாவிட்டால் கள்ளச்சாராய சாவு அதிகரித்துவிடும் என்று தெரிவித்தார்.

நெல்லையில் தந்தையின் மதுப்பழக்கத்தால் அவரது மகன் தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுக்கடைகளை மூட தமிழக அரசு முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Related Posts