தமிழகத்தில் பரவலாக கோடை மழை: சென்னையில் வெயில் உக்கிரம்

 

 

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்கிறது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்து வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதேபோல், நாமக்கல், புதுக்கோட்டை, விருதுநகர், நீலகிரி, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததால், வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தபோதும் சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை மழை பெய்யவில்லை. இதன்காரணமாக சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின்  உக்கிரம் அதிகமாக உள்ளது.

Related Posts