தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகரிப்பு

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி கொளுத்தியதால், மக்கள் அவதியடைந்தனர்.

சென்னை : ஏப்ரல்-02

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுவதால், மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகளவாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் தஞ்சாவூரில் 105 புள்ளி 8 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும், சேலத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியது. இதேபோல், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. 

Related Posts