தமிழகத்தில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம்

 

 

தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல்களுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் கலந்துகொண்டு தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, ராமநாதபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மக்களவைத் தொகுதி வேட்பாளா்களுக்கும் ஆதரவாகப் பிரசாரம் செய்கிறார். 

இதற்காக, பிரதமர் மோடி தில்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய நான்கு இடங்களில் நடைபெற்றற பொதுக் கூட்டங்களில் பங்கேற்று திமுக-காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி என அடுத்தடுத்து தேசியத் தலைவர்களின் வருகையால் தமிழகத்தில் தோ்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது.

Related Posts