தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

 

 

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 16ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

2017-18-ம் ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தொடங்கி,ஏப்ரல் மாதம் 6-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகளும், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்களும் என எழுதினர். இதையடுத்து பிளஸ் டு தேர்வு முடிவுகள் வரும் 16 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் dge.tn.nic.in என்ற இணைய முகவரியிலும், dge.tn.gov.in என்ற இணையதளத்திலும் காணலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Posts