தமிழகத்தில் பிளஸ்1 அரசு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம் 

தமிழகத்தில் 11-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி தொடங்கி 22-ந் தேதி நிறைவு பெற்றது இந்த தேர்வினை சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதினர்.  விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததையடுத்து தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது. www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு எண், பிறந்த தேதி, ஆகியவற்றை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 11-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96 புள்ளி5 சதவீதமும், மாணவர்கள் 93புள்ளி 3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகள் 90புள்ளி 6 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 636 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ்1 தேர்வு எழுதிய 78 சிறைக் கைதிகளில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 98புள்ளி 08 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம் 97புள்ளி ஒன்பது பூஜ்யம் சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 97புள்ளி ஆறு பூஜ்யம் சதவீத தேர்ச்சியுடன் 3-ம் இடத்தையும் பிடித்துள்ளது. 89 புள்ளி இரண்டு ஒன்பது சதவீத தேர்ச்சியுடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

Related Posts