தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு : சென்னை ஐகோர்ட்

 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை, ஏப்ரல்-18

மத்திய அரசிடம் இருந்து நிர்பயா நிதியை முழுமையாக பெற்று தமிழக அரசு பயன்படுத்த வேண்டும் என  சூரியபிரகாசம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

தனியாக இருக்கும் பெண்களிடம் கொள்ளை, கொலை அதிகரித்துள்ளது. இது தொடர்பான எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Related Posts