தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் கருவி விரைவில் பொருத்தப்படும்-விஜயபாஸ்கர்

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் கருவி விரைவில் பொருத்தப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க கருவிகள் இருப்பதை சுட்டிக்காட்டினார். இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவர்களும், தலைகவசம் அணிய வேண்டியது அவசியம் என்றார் அவர்.

முன்னதாக தமிழ்நாடு அரசுதுறை சார்பில் வாகன தணிக்கை பணிக்காக மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு இ-சலான் கருவி வழங்கும் நிகழ்ச்சி, திருச்சி கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு கருவிகளை வழங்கினர்.

Related Posts